பாலியல் வழக்கில் பொதுமன்னிப்பு - பதவி விலகிய அதிபர்

by Staff / 11-02-2024 01:16:38pm
பாலியல் வழக்கில் பொதுமன்னிப்பு - பதவி விலகிய அதிபர்

ஜெர்மனி அருகே உள்ள ஹங்கேரி நாட்டின் பழமைவாத கட்சியை சேர்ந்த அதிபர் கட்டலின் நோவாக் பெரும் சர்ச்சைகளுக்கிடையில் தற்போது பதவி விலகியுள்ளார். அரசு நடத்தும் குழந்தைகள் இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறையை மறைக்க உதவிய நபருக்கு அதிபர் அதிகாரத்தின் அடிப்படையில் அவர் பொது மன்னிப்பு வழங்கியது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து போராட்டங்கள் வெடித்த நிலையில் அவர் பதவி விலகும் அறிவிப்பை தற்போது வெளியிட்டார்.

 

Tags :

Share via