அடுத்த தேனிலவு திகில்.. புதுமண தம்பதி மாயம்

by Editor / 10-06-2025 01:31:34pm
அடுத்த தேனிலவு திகில்.. புதுமண தம்பதி மாயம்

உ.பி.யைச் சேர்ந்த கௌஷலேந்திர பிரதாப் சிங் - அங்கிதா சிங் புதுமண தம்பதி தேனிலவுக்கு சிக்கிம் சென்றுள்ளனர். மங்கன் மாவட்டம் லாச்சென்-லாச்சுங் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அவர்கள் பயணித்த கார் 1,000 அடி உயரத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்துள்ளது. இக்கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், புதுமண தம்பதியினர் மாயமாகியுள்ளனர். 14 நாட்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், பிரதாப் சிங்கின் தந்தை, இருவரையும் கண்டுபிடித்து தரும்படி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via