தவெக-வினர் 114 பேர் மீது வழக்கு

by Editor / 10-06-2025 01:28:26pm
தவெக-வினர் 114 பேர் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 114 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தியாகராய நகர் பகுதியில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தவெக மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட 114 பேர் மீது மேற்கு மாம்பலம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via