ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியம்

by Staff / 13-03-2023 04:08:13pm
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியம்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசிடம் ஒப்புதலை பெற்றுள்ளது. இதையடுத்து, இன்று நடைபெற்ற புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அனைத்து ரேசன் அட்டைதார்களுக்கும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via