11 மணி நிலவரம் படி 37.56% வாக்குகள் பதிவாகியு ள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில் மக்கள் வாக்களிக்க வராத நிலையில் இயந்திர கோளாறு காரணமாகவும் கலர் நிலவரம் உள்ள நிலையில் 11 மணி நிலவரம் படி 37.56% வாக்குகள் பதிவாகியு ள்ளன. தமிழக முழுவதும் மொத்தம் 5.73 43 291 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் மூத்த குடிமக்களிடம் இருந்து இளைஞர்களிடமும் ஆர்வம் அதிகரித்ததின் காரணமாக வாக்குப்பதிவு அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும்தெரியவருகிறது.
11 மணி நிலவரம் படி மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
திருப்பத்தூர் 42.48 சதவீதம்
ஈரோடு 41%
சேலம் 40 சதவீதம்
கரூர் 39. 70%
திண்டுக்கல் 39.05
ராணிப்பேட்டை 38.70
தர்மபுரி 38.26
திருச்சிராப்பள்ளி 38.08
திருவாரூர் 37.19
கோயம்புத்தூர் 38.62
சென்னை 35.47
காலை ஒன்பது மணிநிலவரப்படி 17.51% காலை 11 .00 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 45.87% பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச வாக்குப்பதிவு: திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை தொகுதியில் குறைந்தபட்சமாக 30.73% பதிவாகியுள்ளது
Tags :

















