இன்று தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இரவு பத்து மணிக்கு இங்கிலாந்துக்கு அரசு முறை பயணம்
இன்று தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இரவு பத்து மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு செல்கிறார். இங்கிலாந்தில் செப்டம்பர் 10 முதல் 16 வரை ஐரோப்பிய நாடுகளின் தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ் நாட்டில் முதலீடுகளை செய்வதற்கு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சில்வர் ஸ்டோன் சுற்று களத்தில் நடைபெறும் மிச் லீ மான்ஸ் கோப்பை பந்தயத்தின் ஐந்தாவது சுற்றில் அஜித்குமாரின் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளதால் முதலமைச்சர் விஜய் நேரில் அதனை பார்க்க வாய்ப்புள்ளதாகவும் இருவரும் சந்தித்து பேசக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட பொழுது அஜித்குமார் அதற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார் என்பது அறியத்தக்கது.
Tags :



















