டாக்டர் ராமதாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அன்புமணிஅணிமாம்பழ சின்னத்தைபயன்படுத்துவதில் இருந்த தடை நீங்கி உள்ளது..
சென்னை 13வது உதவி சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி எம் தர்ம பிரபு மாம்பழ சின்னத்தை முடக்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்தார் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் வரம்பிற்கு உட்பட்ட ஒரு விவகாரத்தில் குறிப்பாக தேர்தல் நடை முறைகள் தொடங்கியுள்ள நிலையில் நீதிமன்றம் தலையிடுவது சரியாகாது என்று நீதிபதி குறிப்பிட்டதோடு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி கோரிக்கைகளை முன் வைக்க ராமதாஸுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று நாட்களுக்கு முடிவெடுக்குமாறு சிவில் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டாக்டர் ராமதாஸின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணிக்கு ஒதுக்கப்பட்ட மாம்பழ சின்னத்தை சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்துவதில் இருந்த தடை நீங்கி உள்ளது.
Tags :


















