வெளியே சிரித்து உள்ளே அழுகின்றோம்-ம.தி.மு.க அவைத்தலைவர்
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் சின்னம் தொடர்பாக ம.தி.மு.கவின் அமைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார் .சமீபத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர்,நாங்கள் கொடுத்த விருப்பப்பட்டியலிருந்தே நாலு தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். நாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது மகிழ்ச்சி .ஆனால் ,எண்ணிக்கை குறைந்ததில் வருத்தம். சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகின்றோம் என்று தம் கட்சியினரின் மனவேதனையை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்.
2026- சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவிற்கு நான்கு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டன. இது கடந்த 2021- வது தேர்தலை விட இரண்டு தொகுதிகள் குறைவு .ஒதுக்கப்பட்ட நாலு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரே ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற ஒப்பந்தமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் முன்பு தெரிவித்தார். தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததாலும் தங்கள் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போனதாலும் இரண்டாம் கட்ட மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் தொகுதிபங்கீட்டிற்கு பின்னா் இதைத் தெரிவித்தார். திராவிட இயக்கத்தை பாதுகாக்கவும் பாஜக போன்ற சக்திகளை எதிர்க்கவும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டதாக ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டு இருந்தது நோக்கத்தக்கது.
Tags :


















