அடுக்குமாடி குடியிருப்பு கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்த ஊழியர் உயிரிழப்பு.

by Editor / 04-12-2022 08:16:18am
அடுக்குமாடி குடியிருப்பு கழிவு நீர் தொட்டி  சுத்தம் செய்த ஊழியர் உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த சீக்கிணாங்குப்பம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த பத்தாண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் இவர் குடிநீர் மற்றும் கழிவு நீர்களை ஆய்வு செய்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவார்.இந்நிலையில்  மாலை 7 மணிக்கு  வேலூர் கிராம வீட்டுக்கு வருபவர் வரவில்லை என உறவினர்கள் தேடிய நிலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்னால் அவருடைய இருசக்கர வாகனம் நிற்பதைக் கண்டு அங்குள்ள கழிவு நீர் தொட்டி திறந்து இருப்பதை பார்த்து சோதனை செய்த போது உள்ளே ரமேஷ் இறந்த நிலையில் கிடைத்துள்ளார் உடனடியாக கூவத்தூர் போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ரமேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

Tags :

Share via
Logo