பிரதமர் வாழும் கலை மைய விழாவில் பங்கேற்பு

by Admin / 11-05-2026 01:16:15am
பிரதமர் வாழும் கலை மைய விழாவில் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள வாழும் கலை சர்வதேச மையத்தில் நடைபெற்ற 45 வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.புதிதாக கட்டப்பட்ட தியான மந்திர் த்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இம் மண்டபம் உலகிலேயே மிகப்பெரிய தியான மையங்களில் ஒன்றாகும். இது அமைதி மற்றும் ஆன்மீக நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மனநலம், ஊரக வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றும் குறித்த ஓராண்டு கால திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அவர் பேசும் பொழுது ,சூழலியலும் பொருளாதாரமும் பிரிக்க முடியாதென்று வலியுறுத்தியதோடு இயற்கையான வாழ்க்கை முறை வாழும் கலை அமைப்பின் ஒரு வெளிப்பாடு என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை, விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் அவர் தன் பேச்சில் எடுத்துரைத்தார்,. இந்த நிகழ்வில் உலகளாவிய தலைவர்கள் கலைஞர்கள் தொழிலதிபர்கள் பல நாடுகளில் இருந்து ஆடுகளம் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via
Logo