இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கும் அமேசான் வழக்கறிஞர் புகார்.

by Editor / 10-10-2022 10:11:46pm
இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கும் அமேசான் வழக்கறிஞர் புகார்.

 மதுரை அண்ணாநகரை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான முத்துக்குமார், மத்திய உள்துறை, மத்திய தகவல்தொழில் நுட்ப துறை, வணிக தொழில்துறை, என். ஐ. ஏ, மற்றும் தமிழக தலைமை செயலாளர், டி. ஜி. பி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் அமேசான் சர்வதேச என்னும் வணிக நிறுவனம் தொடர்ந்து இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து, இந்து மத உணர்வுகளை சீர்க்குலைக்கும் விதமாக செயல்பட்டு வருவதால் அமேசான் நிறுவனத்தின் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவானது மதுரை சைபர்கிரைம் காவல்துறையினருக்கு அனுப்பபட்ட நிலையில் இன்று புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மதுரை சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரை சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான காவல்துறையினர் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது  வழக்கறிஞர் முத்துக்குமார் குற்றச்சாட்டு தொடர்பாக அமேசான் நிறுவனம் பற்றிய பல்வேறு ஆதாரங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

 

Tags :

Share via

More stories

Logo