கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துங்கள் - ராமதாஸ் வலியுறுத்தல்

by Staff / 09-05-2024 01:37:16pm
கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துங்கள் - ராமதாஸ் வலியுறுத்தல்

செஞ்சியில் கோடை மழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதா, கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துங்கள் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதை மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. எதிர்காலத்தில் அத்தகைய பாதிப்புகளைத் தடுக்க அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் குறைந்தது 10000 மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படுவதையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுத்த நாளே அரவை நிலையங்களுக்கோ, மண்டல அளவிலான கிடங்குகளுக்கோ கொண்டு செல்லப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via