தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 11,72,240 ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

by Editor / 03-10-2024 10:22:01pm
 தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 11,72,240 ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.2,029 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 11,72,240 ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவார்கள்" என்று கூறியுள்ளார்.

 

Tags : தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Share via