தாமரை பூ பறிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Staff / 23-06-2024 12:37:20pm
தாமரை பூ பறிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசங்கரை அருகில் உள்ளது ஏனாதி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் செந்தில், மாரியம்மாள் ஆகியோரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கஸ்வான். சிறுவன் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள குளத்தில் தாமரை பூவை பறிக்க சென்றதாக கூறப்படுகிறது. சேற்றில் இருந்த தாமரை கொடிகளில் சிறுவனின் கால்கள் சிக்கி குளத்து நீரில் மூழ்கினார். சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகே உள்ள மணமேல்குடி தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். கதறி அழுத சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவனின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories