அபிராமி ராமநாதனிடம் ஐ.டி. அதிகாரிகள் விசாரணை
பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமி ராமநாதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அபிராமி ராமநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அபிராமி ராமநாதனை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நேற்று மாலை 4 மணி முதல் கஸ்தூரி எஸ்டேட்டில் உள்ள அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். அபிராமி ராமநாதன் கட்டிவரும் வணிக வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தத்தை அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
Tags :