போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

by Staff / 15-05-2023 05:22:06pm
போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

கோவை ஆர் எஸ் புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர், முத்துக்குமார், இவருக்கு நேற்று ஆர் எஸ் புரம் உழவர் சந்தை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் பேரில் அங்கு சென்று சொதனை மேற்கொண்ட பொழுது அங்கு, கோவை வேடபட்டியை சேர்ந்த 26 வயதான விஷ்ணு என்பவர் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via