மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால் மக்கள் தவிப்பு.

by Editor / 24-10-2022 10:18:10pm
 மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால்  மக்கள் தவிப்பு.

விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்க
தரைப்பாலத்தில் சிறிய அளவில் மழை பெய்தாலே சுரங்க பாதையில் மழைநீர் மூழ்கி தேங்கி நிற்கும். இதனால் பொதுமக்கள் மூன்று கிலோ மீட்டர் அளவு சுற்றி விழுப்புரம் நகரத்தை அடையக்கூடிய அவல நிலை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக மீண்டும் ரயில்வே சுரங்க பாதையில் முட்டி அளவு மழைநீர் தேங்கியது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். பொய்யபாக்கம், காக்குப்பம், கீழ்பெரும்பாக்கம் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிக்கு செல்ல மூன்று கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் முட்டி அளவு நீரிலும் இருசக்கர வாகனங்களை இயக்கி சென்றனர்.


அப்போது தேங்கிய மழை நீரானது வாகனத்துக்குள் புகுந்ததால் சிலரது வாகனங்கள் பழுது ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர். சுரங்க பாதையில் நீர் தேங்கியது குறித்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் சுரங்கப்பாதையில் மழை நீருடன் கலந்த கழிவுநீரில் அமைச்சர் பொன்முடி சுரங்கப் பாதையில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.

மழைநீரும் கழிவுநீரும் சுரங்கப்பாதையில் தேங்கியதால் மனம் நொந்தபடி மக்கள் புத்தாடை உடுத்தி வாகனத்தில் வந்த நிலையில் கழிவு நீரில் நீந்தி செல்லும் நிலைகண்டு வேதனையோடு கடந்து சென்றனர்.

 

Tags :

Share via