ஆண்கள் ஹாக்கி- இந்தியா முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது
ஆண்கள் ஹாக்கி- இந்தியா முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது
இந்திய வீரர்கள்டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.ஆனால், இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் 10-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
இதனால் முதல் கால் பகுதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஹர்மன்ப்ரீத் சிங் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது3-வது காலிறுதி ஆட்டத்தில் 26-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால் நியூசிலாந்து அடுத்த நிமிடத்தில் (27-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.4-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
Tags :