பச்சை பட்டு உடுத்தி கள்ளழகா் ஆற்றில் இறங்கினாா்.மதுரை கோலாகலம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தேரோட்டம் என மதுரை கோலாகலமாக இருந்த நிலையில், இன்று அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது...
தல்லாகுளம் அழகர் பெருமாள் கோவிலில் இருந்து தங்கக்குதிரைவாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிகொடுத்த மாலையுடன் புறப்பட்ட கள்ளழகர்- தீபங்கள் குடை சூழ, தோள்பையில் தண்ணீர் பீச்சி அடித்தும் கோவிந்தா கோவிந்தா என்கிற கோஷங்கள் முழங்கவும் , வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் வரவேற்கும் நிகழ்வு நடந்தது.. தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகரை எதிர்கொண்டு பக்தர்கள் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வழிபாடுகளை செய்தனர். கள்ளழகா் ஆற்றில் இறங்கினாா்.
Tags :



















