தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட உள்ள திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு
இன்று வெளியாக உள்ள பெரும் சர்ச்சைக்கு உள்ளான கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என ப ல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை வைத்துள்ள நிலையில் ,தமிழ்நாடு உளவுத்துறை இந்த திரைப்படத்தை வெளியிட்டால் பல்வேறு அமைப்புகளும் போராடவாய்ப்பு உள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் அனைத்து காவல்துறை ஆணையர் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அவர் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட உள்ள திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் பதட்டமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அத்துடன் சமூக வலைத்தளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார். சுதீப் தோசென் இயக்கிய படத்தை , விபுல் அம்ரூத் லால் சா தயாரித்துள்ளார் .: அதான் சர்மா ,யோகிதா பிஹானி, சோனியா பாலானி சித்தி இத்தினானி நடித்துள்ள தீ கேரளா ஸ்டோரி கேரள மாநிலத்தில் உள்ள பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு சிரியா நாட்டிற்கு ராணுவ பயிற்சிக்காக அனுப்பப்படுவதாக கதை சித்தரிக்கப்பட்டு இருந்ததனால் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் படம் இன்று திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
Tags :