யூடியூப் பார்த்து கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

by Staff / 31-05-2024 03:34:47pm
யூடியூப் பார்த்து கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை தாம்பரத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையை நடத்தினர். அதன்படி, சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் (27) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை கிடைக்காததால் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தி சுமார் 14 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளார். தொடர்ந்து, ரேபிடோவில் பைக் ஓட்டி வந்ததோடு, யூடியூப் வீடியோக்களை பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories