காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதமடைந்தது.

by Editor / 25-07-2024 10:57:20pm
காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வந்தது.கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.இந்த நிலையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் முதல் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் உதகை அருகேயுள்ள கேத்தி நிலையத்தின் மீது இராட்சத கற்பூர மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதமடைந்தது.அதேபோல மின் கம்பிகள் மீதும் விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தற்போது சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தீயணைப்பு துறையினர் சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : காவல்நிலையம் மீது இராட்சத மரம் விழுந்து காவல்நிலைய கட்டிடம் சேதமடைந்தது...

Share via