கடலுக்கு அடியில் வழிபாடு நடத்திய பிரதமர்

by Staff / 25-02-2024 02:28:08pm
கடலுக்கு அடியில் வழிபாடு நடத்திய பிரதமர்

நீருக்கடியில், ஆழ்கடலுக்குச் சென்ற பிரதமர் மோடி, நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரம் இருக்கும் இடத்தில் பிரார்த்தனை செய்தார். இது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் நெருங்கிய தொடர்புடைய புராதன நகரமாக இருந்தது. இதுகுறித்து X பதிவில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தை கடந்த பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என கூறியுள்ளார்.

 

Tags :

Share via