பள்ளி மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

by Staff / 06-04-2024 11:29:19am
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூரில் செயல்பட்டு வரும்  அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவியிடம்  கருப்பசாமி (41) என்ற ஆசிரியர் தவறாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி ஆசிரியர் கருப்பசாமியை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories