இன்றைக்கு முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் களத்தில் இருக்கின்றனர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் களத்தில் இருக்கின்றனர் ஆனால் மற்ற அமைச்சர்கள் எங்கே என்று தெரியவில்லை - வாயில் வடை சுடாமல் திமுக அரசு செயலில் காட்ட வேண்டும் - மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொண்டால் தான் சென்னையில் வாழ முடியும் என்ற நிலை திமுக ஆட்சியில் உள்ளது.சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், உணவு சரியாக வழங்கப்படவில்லை என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 225 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ , கே.டி.ராஜேந்திரபாலாஜி, எஸ் .பி .சண்முகநாதன், சி.தா. செல்ல பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், ராஜவர்மன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்
முன்னாள் அமைச்சர் வேலுமணி அமைதியானவர், நான் கூட ஏதாவது பேசுவேன் அவர் அதுவும் பேசமாட்டார். அவர் அடித்தார் என்று கூறுவதில் இருந்து அது பொய்யான வழக்கு என்பது தெரிய வருகிறது.
யாரோ தூண்டுதல் பெயரில் காழ்ப்புணர்ச்சி பெயரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வழக்கு போட்டு அவரை முடக்க அரசு நினைக்கிறதா அல்லது அங்குள்ள அமைச்சர்கள் நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை நடந்தது என்ன என்பது காவல்துறையின் உண்மையான விசாரணையில் தெரிய வரும் .ரூபாய் 4000 கோடி பணம் ஒதுக்கி இருக்கிறோம் இன்னும் ஒரு சொட்டு தண்ணீருடன் நிக்காது என்று கூறினார்.ஆனால் இன்றைக்கு சென்னையில் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கியுள்ளது.வாயில் வடை சுடாமல் இந்த அரசு செயலில் காட்ட வேண்டும்..
சென்னையில் 20 cm மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை வந்ததும் மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டனர் .போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்தாலும் பரவாயில்லை என்று மக்கள் கார்களை நிறுத்தி உள்ளனர்.
2015 இல் அதிமுக ஆட்சியில் இருந்தபோதில் கடுமையான மழை பெய்த போதும், உணவிற்கோ , பாலிற்கோ மக்கள் கஷ்டப்படவில்லை..அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றைக்கு முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் களத்தில் இருக்கின்றனர் .ஆனால் மற்ற அமைச்சர்கள் எங்கே என்று தெரியவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியாக நடவடிக்கை எடுத்த காரணத்தினால் பருவ மழையின் போது சென்னையில் தண்ணீர் தேங்க வில்லை , மக்களுக்கு உணவு, பால் ,பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைத்தன
பருவமழையினால் சென்னை மற்றும் தென் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் ..
முதல்வரும் துணை முதல்வரும் உழைக்கின்றனர் .ஆனால் அமைச்சர்கள், சென்னை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் எங்கே போனார்கள், அவர்களை முதல்வரும் துணை முதல்வரும் நம்பவில்லையா,? இல்லை, அவர்கள் உங்களை நம்பவில்லையா? சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் காணவில்லை. நடவடிக்கை எடுத்ததாக போட்டோ வருகிறது, வீடியோ வருகிறது. விளம்பரம் வருகிறது. ஆனால் மக்களை கேட்டுப் பாருங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்..
இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் பொதுநலத்தோடு செயல்படும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். மழை வெள்ளங்கள் இயற்கை சீற்றங்களை தடுக்கக்கூடிய ஆட்சியாக அதிமுக ஆட்சி இருக்கும் .ரூ.4000 கோடி மழைக்கால பேரிடர் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் அமைச்சர் மேயர் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொருவரும் ஒரு தகவலை கூறுகின்றனர் . உண்மையில் நடந்தது என்ன மர்மமாக இருக்கிறது .
மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொண்டால் தான் சென்னையில் வாழ முடியும் என்ற நிலை திமுக ஆட்சியில் உள்ளது.மதுரை கோவை உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தாலும் சென்னையில் இருக்கும் அளவிற்கு பாதிப்புகள் இல்லை .பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் சென்றடையவில்லை.. கனமழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலும் சேரவில்லை, சோறும் (சாப்பாடு)சென்று சேரவில்லை என்றார்.

Tags :