சல்மான்கான் குடியிருப்புக்குள் புகுந்த பெண்.. போலீஸ் காவலில் வைக்க உத்தரவு

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண் நேற்று கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்குத் தெரியாமல் பெண் ஒருவர் நுழைய முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :