கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட - 50 பேர் மீது வழக்கு.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா தென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தின் ஊருக்குள் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில் கருப்பசாமி பீடம் உள்ளது. இக்கோவிலில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் விழாக்கள் நடத்தி சாமி கும்பிட்டு வருகின்றனர். தற்போது இப்பீடத்தை சுற்றி தனிநபர் தனது சொந்த இடம் என்று கூறி முள்வேலி அமைத்துள்ளார். அடுத்த மாதம் 24.ந்தேதி அன்று கோவில் கொடை வருகிறது. அதனால் பீடத்திற்க்கு செல்ல அனுமதி கேட்டு மாவட்டம் நிர்வாகம், கயத்தாறு தாலுகா அலுவலகம் மற்றும் கடம்பூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும், தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காளியம்மன் கோவில் முன்பு நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, கடம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போது, கோவிலில் பூஜை நடந்த அப்போது சாமியாடிய பெண் ஒருவர் திடீரென முள்வேலியை தாண்டி பீடத்திற்க்கு சென்றார். உடனே பெண்கள் அனைவரும் முள்வேலியை தாண்டி உள்ளேசென்று பூடத்திற்க்கு சிறப்பு பூஜை நடத்தினர்.இதனால் சம்பவ இடத்திற்க்கு மணியாச்சி டி.எஸ்.பி.லோகேஸ்வரன் வந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் முள்வேலியை தாண்டி வந்த ஆண்கள் இருவரை பிடித்து போலீசார் ஜீப்பில் ஏற்றினர். அதற்க்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜீப் முன்பும், பின்பும் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறி தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் போராட்டம் நடத்தியதாக 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags :