2026 ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களின் பிரதான நோக்கம்- கிருஷ்ணசாமி .
திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:
நாங்கள் தற்போது நடுநிலையாக இருக்கிறோம்.2026 ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களின் பிரதான நோக்கம்.நான்கரை ஆண்டுகளாக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் ஆறு மாதத்தில் எப்படி தீர்க்கமுடியும்,ஜாதி குறித்து பேசிய திமுக மாவட்ட நிர்வாகியை முதல்வர் கட்சியை விட்டு நீக்கவேண்டும்.உள்கட்சி பிரச்சனையை சமாளிக்கமுடியாமல் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைக்கும் பிரச்சனையை கிளப்புகிறார்.தங்களுடைய அரசியல் சிக்கலை தீர்க்க மறைந்ததலைவர்களை பலிகடா ஆக்கவேண்டாம்.என்றார்.
Tags : கிருஷ்ணசாமி



















