மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 19 இடங்களில் 316 வாக்கு சாவடிகள்- ஆட்சியர் பீரவீன்குமார் தகவல்

by Staff / 19-09-2025 12:14:34am
மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 19 இடங்களில் 316 வாக்கு சாவடிகள்- ஆட்சியர் பீரவீன்குமார் தகவல்

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளைப் பிரிப்பது சம்பந்தமாக அனைத்து கட்சியினருடன் ஆலோசிக்கப்பட்டது, மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 1,165 இடங்களில் 2,752 வாக்கு சாவடிகள் உள்ளன, தற்போது கூடுதலாக 19 இடங்களில் 316 வாக்குச் சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளன. இதில் 297 வாக்குச் சாவடிகள் ஏற்கனவே உள்ள வாக்குச் சாவடி மையத்திலும், 19 வாக்குச் சாவடிகள் புதிய மையங்களிலும் ஏற்படுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இருந்து மதுரை மாவட்டத்தில் 1,184 இடங்களில் 3,068 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன" என கூறினார்.

 

Tags : மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 19 இடங்களில் 316 வாக்கு சாவடிகள்- ஆட்சியர் பீரவீன்குமார் தகவல்

Share via