முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்.
2025-26 ஒன்றிய பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்.பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதங்களை எழுப்ப வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகளை எம்.பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்!
புயல் நிவாரண நிதி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி போன்ற தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி விவகாரங்கள் குறித்து விவாதங்களை எழுப்புவது தொடர்பாக எம்.பிக்களுக்கு ஆலோசனை!
ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்தச் சட்டம், யுஜிசி வரைவு கொள்கை, பொது சிவில் சட்டம் போன்றவை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்தை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்