திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது அதேபோல் அய்யா வைகுண்டர் அவதாரப் பதியும் கடற்கரை அருகில்தான் அமைந்துள்ளது.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
நாளை அம்மாவாசை துவங்க உள்ள நிலையில் இன்று இரவில் திருச்செந்தூர் கோவில் கடல் சுமார் 500 மீட்டர் நீளம் வரை 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிகாணப்படுகிறது.
இது மாதந்தோறும் வழக்கமாக ஏற்படும் நிகழ்வு என்றாலும் கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று கடல் அலைகள் அதிகமாக இல்லாமல் காட்சியளித்து வருவது பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.
வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கமாக கோவில் கடலானது அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் குறிப்பிட்ட நேரங்களில் சுமார் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை அம்மாவாசை தினம் துவங்க உள்ள நிலையில் இன்று இரவு திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழி கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் ஆனது அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது. இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் இரவு என்றும் பாராமல் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.
Tags : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது.