விற்பனை செய்வதற்காக  கஞ்சாவைத்திருந்த 3 நபர்கள் கைது.

by Editor / 01-09-2024 07:31:25pm
விற்பனை செய்வதற்காக  கஞ்சாவைத்திருந்த 3 நபர்கள் கைது.

ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர்  வேத மாணிக்கம் சேம்ஜி  தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஏர்வாடி அரசு பள்ளி  அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஏர்வாடி, LNS புரத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் (23), சேக் மன்சூர் (21), முகமது இர்பான் (24) ஆகிய மூவரையும் சோதனை செய்து பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட   30 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. உதவி ஆய்வாளர் மூவரையும் ஏர்வாடி காவல் நிலையம் அழைத்து வந்தார். இதுகுறித்து ஏர்வாடி காவல் ஆய்வாளர் சுதா  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்துல் ரஹீம், சேக் மன்சூர், முகமது இர்பான் ஆகிய மூவரையும் இன்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

 

Tags : விற்பனை செய்வதற்காக  கஞ்சாவைத்திருந்த 3 நபர்கள் கைது.

Share via

More stories