சென்னைக் கிழக்குக்கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் மாற்றம்

by Admin / 02-05-2022 10:42:59am
சென்னைக் கிழக்குக்கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  சாலை என்று பெயர் மாற்றம்

சென்னைக் கிழக்குக்கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  சாலை என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டு ள்ளது.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி நகர் பெயர் அத்தெருவில் வசித்து வந்த ,கடந்த ஒராண்டிற்கு முன்பு இறந்த நடிகர் விவேக்கின் பெயரில் சின்ன கலைவாணர் விவேக் சாலை என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நேற்று கிண்டியில் நடந்த நெடுஞ்சாலை துறை 75 வது பவள விழாவில் முதலமைச்சர் கிழக்குக்கடற்கரை சாலை பெயர் மாற்றம்குறித்த செய்தியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ட்விட்டா் பதிவில் அத்தகைய நல்ல சாலைகளை அமைக்கும் பணியை ஏற்றுள்ள நெடுஞ்சாலைத்துறை பவளவிழாவில், அதற்கு தனி அமைச்சகம் உருவாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் பெயர் கிழக்குக்கடற்கரை சாலை-க்குச் சூட்டப்படும் என்று அறிவித்தேன்.

 

Tags :

Share via