தீபாவளிக்கு டாஸ்மாக் நேரம் மாற்றம்.

by Staff / 09-11-2023 02:36:03pm
தீபாவளிக்கு டாஸ்மாக் நேரம் மாற்றம்.

நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு மது விற்பனை என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மது விற்பனை குறைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் மதுக்கடை நேரம் குறைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு அப்படியொரு திட்டம் இல்லை எனக் கூறிய அவர், மதுக்கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

Tags :

Share via

More stories