“விடாமுயற்சி தான் காரணம்” - சீமானை பாராட்டிய துரை வைகோ
கோயம்புத்தூரில் இன்று நடக்க இருக்கும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துரை வைகோ, “கொள்கை ரீதியாக எங்களுக்கும் சீமானுக்கு வேறுபாடு இருக்கலாம். ஆனால், தற்போது 8 விழுக்காடு பெற்றுள்ளார் என்றால் அது அவருடைய விடாமுயற்சி, இயக்க தோழர்களுடைய உழைப்பு தான் காரணம்” என்றார்.
Tags :