கந்து வட்டி கொடுமையால் மினிபஸ் அதிபர் தற்கொலை
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67) மினி பஸ் அதிபர். இவர் படந்தாலுமூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று உள்ளார். இதனால் கடனில் மூழ்கி போன விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினிபஸ்சாக விற்பனை செய்து கந்து வட்டி கும்பலுக்கு கடன் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டின் குளியல் அறைக்குள் சென்ற விஜயகுமார் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்தியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் வினோஷ், மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அதில் பைனான்ஸ் நிறுவனம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்துள்ளனர். இதனால் கந்து வட்டி கும்பல் மேல் நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கந்து வட்டி கும்பல் மிரட்டிய பரபரப்பு ஆடியோக்களையும், கந்து வட்டி கும்பல் டார்ச்சர் குறித்த ஐந்து பக்க புகாரையும் அவர் கொடுத்துள்ளார். கந்து வட்டி கும்பலின் கொடுமையால் மினி பஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டது மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :