போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

by Editor / 14-04-2025 12:58:39pm
போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

போலீஸ் டிஐஜி மகேஷ் குமாரின் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டு டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். புகார்தாரரின் வேண்டுகோளின் படி, பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகேஷ் குமார் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சஸ்பெண்ட் உத்தரவு ரத்தானது.

 

Tags :

Share via
Logo