கொலை வழக்கில் மூன்று பேர் கைது.

by Staff / 01-06-2023 05:11:40pm
கொலை வழக்கில்  மூன்று பேர் கைது.

மீஞ்சூர் அடுத்த, வல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சநாதன், 58. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளி. ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார். இம்மாதம், 28ம் தேதி இரவு, துாங்கிக் கொண்டிருந்த பஞ்சநாதனின் தலையில், மர்ம நபர்கள், கல்லை போட்டு கொலை செய்து தப்பி சென்றனர். வழக்கு பதிந்த மீஞ்சூர் போலீசார், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், அத்திப்பட்டு புதுநகர் சுரேஷ், 45, எர்ணாவூர் ராமமூர்த்தி, 38, காட்டுப்பாக்கம் மகாராஜன், 31, ஆகிய மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் பிரச்னையால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo