பனிமய மாதா பேராலயத்தில் பாஜக தலைவர் பிராத்தனை

by Staff / 01-06-2023 05:08:36pm
பனிமய மாதா பேராலயத்தில் பாஜக தலைவர் பிராத்தனை

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராத்தனை. தூத்துக்குடியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு வந்த அண்ணாமலையை பங்குதந்தை குமாரராஜா வரவேற்றார் பின்னர் மெழுகுவர்த்தியை காணிக்கையாக வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிராத்தனை மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சித்தாரங்கன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு எஸ் சுரேஷ் குமார், வாரியார், மண்டல பொருளாளர் வன்னிய ராஜ், காசிலிங்கம் மணிகண்டன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

Tags :

Share via

More stories