கல்வியும் மருத்துவத்திற்கான செலவுகள் ஒருபோதும் இலவசங்கள் ஆகாது முதலமைச்சர்
கல்வி மருத்துவத்திற்கு அரசு செலவு செய்வது ஒருபோதும் இலவசம் ஆகாது என்றும் அது அறிவு நலம் சார்ந்தது. உடல் நலம் சார்ந்தது. அறிவு நலம் சார்ந்தது கல்வி, உடல்நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவுக்கு மக்கள் நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது.பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி மக்களை தேடி மருத்துவம் போன்றவை சமூக நலத்திட்டங்களை என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னதாக பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை முதலமைச்சர் வழங்கினார். விழாவிற்கு வருகை தந்த போது சாலையோரம் என்ற மாணவிகளுடன் அவள் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் பெரம்பூர் ஜமாலியா திருவிக நகர் பேப்பர் மில் சாலை தலை கோசஸ் ஆறு வடிநில பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags :