வாயில் சிறுநீர் கழித்து மாணவருக்கு கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரிலல் மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. எம்சிஏ மாணவர் ஆயுஷ் திவேதி (23) தனது நண்பருடன் காதலியை சந்திக்கச் சென்றபோது, ஒரு தலைமைக் காவலர் உட்பட கும்பல் ஒன்று அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அதன் பின் ஒருவர் பின் ஒருவராக சிறுநீரை அவரது வாயில் ஊற்றி குடிக்க வைத்து சித்திரவதை செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.ுள்ளனர். உள்ளூர் புலனாய்வுப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட தர்மேந்திர யாதவ் என அடையாளம் காணப்பட்ட தலைமைக் காவலர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதாக குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் நிலப்ஜா சவுத்ரி தெரிவித்தார்.
Tags :