ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த புகாரில், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் அனுப்பிய பழைய நோட்டீசை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. புதிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தை பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக அறக்கட்டளைக்கு உட்பட்ட முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் பாஜக நிர்வாகி சீனிவாசன் புகார் அளித்திருந்தார். இதன் விசாரணைக்கும், நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Tags :



















