தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கரோனா தொற்று உறுதி

by Editor / 13-02-2022 10:35:20pm
தமிழகத்தில் இன்று 2,296 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,36,262. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,46,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,56,648.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று இல்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,01,593 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 461 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,835 பேருக்குத் தொற்று உள்ளது./

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 264 தனியார் ஆய்வகங்கள் என 333 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 41,699.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 6,21,38,568.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 1,00,173.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 34,36,262.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,296

சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 461.

சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 6554.தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,383 பேர். பெண்கள் 913 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை.இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8229 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 33,56,648 பேர்.

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,915 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9044 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags : Confirmation of corona infection

Share via