1000 படப்பெயர்களை கொண்டு இளையராஜாவை வரைந்த ஓவியர்

by Staff / 02-06-2024 02:04:27pm
1000 படப்பெயர்களை கொண்டு இளையராஜாவை வரைந்த ஓவியர்

இசைஞானி இளையராஜா 81வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழியும் நிலையில் பழனியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் அன்புச்செல்வன் என்கிற ஓவியர், இளையராஜா இசையமைத்த ஆயிரம் திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு அவரது உருவப்படத்தை ஓவியமாக வரைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ”இளையராஜாவின் 45 ஆண்டுகால பயணத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பிறந்தநாள் பரிசாக இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது” என்றார்.

 

Tags :

Share via