கார் மோதி தொழில் அதிபர் பலி

by Staff / 25-09-2023 04:06:47pm
கார் மோதி தொழில் அதிபர் பலி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் சொந்தமாக கரூரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக காரில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். கொடுமுடி அடுத்து வெங்கபூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த வீடு ஒன்றின் சுற்றுச்சூழல் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார் உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து கொடுமுடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories