தனுஷ் - நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

by Admin / 27-11-2024 04:54:57pm
தனுஷ் - நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

தனுஷ்-நயன்தாராவிற்கு எதிராக உரிமையியல்  வழக்கு தொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நயன்தாராவிற்குஎதிராக வழக்கு தொடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

2022 ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்த வீடியோவை நயன்தாரா பியாண்டு த பேரிடேல் ஆவணப்படமாக வெளியிடவிரும்பி நானும் ரவுடிதான் படத்திலிருந்து சில காட்சிகளை பதிவு செய்ய நடிகர் தனுஷிடம் அனுமதி கேட்டு இருந்தார். அதற்குநடிகர் தனுஷ் 3 நொடிகாட்சிகளுக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தாா். இரண்டு ஆண்டுகளாக நடிகர் தனுஷ் அனுமதி வழங்காததை அடுத்து மொபைல் போனில் எடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்து ஆவணப்படத்தை வெளியிட்டு விட்டார். இருப்பினும். வெளியிடுவதற்கு முன்பாக தனுஷின் செயலிற்கு மூன்று பக்க  கடிதத்தை நயன்தாரா எழுதி இருந்தார் .அது மிகப்பெரிய ஒர் அதிர்வலையை உருவாக்கி இருந்தது. இந்நிலையில் ,தனுஷ் அது குறித்து எந்த விதமான பதிலும் அளிக்காத நிலையில், தற்போது அவர் உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க அனுமதி பெற்றதை அடுத்து நயன்தாரா விக்னேஷ் சிவன் பதிலளிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via