வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்

by Editor / 22-05-2025 12:50:18pm
வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறதா ராணுவம்

இடைக்கால அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ராணுவம் முரண்பட்டுள்ளதால், வங்கதேசத்தில் அரசியல் பதற்றம் நிலவுகிறது. அரசை வழிநடத்தும் முகமது யூனுஸின் செயல்பாடுகளை ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-சமான் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
ராணுவத் தளபதியின் தலையீடு இடைக்கால அரசை கவிழ்க்க நடக்கும் சதி என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் 2024ல் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via