இந்தோனேசியாவில் தண்ணீர் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்து விபத்து 16 பேர் படுகாயம்

by Staff / 13-05-2022 02:42:17pm
இந்தோனேசியாவில் தண்ணீர் பூங்காவில் நீர் சறுக்கு   உடைந்து விழுந்து விபத்து 16 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவில்  உள்ள தண்ணீர் பூங்காவில் நீர் சறுக்கு உடைந்து விழுந்து கோர விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.  சறுக்கி விளையாட பயணிகள் காத்திருந்த நிலையில் திடீரென்று சறுக்கு உடைந்து 30 மீட்டர் தூரத்திற்கு கீழே பயணிகள்  வீசப்பட்டனர் விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். எட்டு பேருக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டது பயணிகளின் பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக்கூடும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர் .

 

Tags :

Share via

More stories

Logo