இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 2. 86 லட்சம் கோடி ரூபாயை  வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

by Admin / 25-05-2026 09:15:37am
இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 2. 86 லட்சம் கோடி ரூபாயை  வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பையில் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழுவின் 623- வது கூட்டத்தில், 2025- 26 நிதி ஆண்டிற்காக மத்திய அரசுக்கு 2. 86 லட்சம் கோடி ரூபாயை  வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நிதி பரிமாற்றம் நிதி பற்றாக்குறையை மத்திய அரசு சமாளிக்க ஆதாரமாக அமையும். இதுவரை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய உபரித்தொகையிலேயே இது மிகவும் அதிகபட்ச தொகை ஆகும். கடந்த நிதியாண்டில் 2.69 லட்சம் கோடி விட இது அதிகமாகும் .வெளிநாட்டு நாணய சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் வட்டி வருவாய் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த வருமானம் 26.42 சதவீதம் அதிகரித்து உள்ளது தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது பேரிடர் பாதுகாப்பு நிதி 6.5% ஆக பராமரித்து 1,09,379.64 கோடியை ஒதுக்கி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo