200 ஆண்டுகள் போராட்டம்.. முதல் முறையாக கோவிலுக்குள் சென்ற பட்டியல் இன மக்கள்

by Editor / 02-01-2023 08:24:24pm
200 ஆண்டுகள் போராட்டம்.. முதல் முறையாக கோவிலுக்குள் சென்ற பட்டியல் இன மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பட்டியல் இன மக்கள் தவிர்த்து மற்ற அனைத்து சமூக மக்களும் சாமி தரிசனம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், கோவிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என பட்டியல் இன மக்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, கோவிலுக்கு சென்று வழிபட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.அதன் அடிப்படையில், எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த பட்டியல் இன மக்கள் ஒன்றாக திரண்டு வந்து  “கோவிந்தா ..கோவிந்தா..” என பக்தி முழக்கத்துடன் வரதராஜ பெருமாளை வழிபாடு செய்தனர்.இதையொட்டி, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via